Lorem ipsum dolor sit amet, consectet eiusmod tempor incididunt ut labore e rem ipsum dolor sit amet. sum dolor sit amet, consectet eiusmod.

Visiting Hours

Gallery Posts

Blog Details

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் Dr.ம.அரவிந்தனின் வைத்திய ஆலோசனை.

 

 31.12.2023 அன்று மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு Dr.ம.அரவிந்தன், உட்சுரப்பியல் நிபுணர்- யாழ்.போதன வைத்தியசாலை, அவர்களும் அவர்களது வைத்திய மற்றும் தாதிய குழுவினரும் வருகை தந்தனர்.

அவர்கள் இரட்ணம் அறக்கட்டளையின் அனுசரனையுடன் 2005 இருந்து மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் நடைபெற்று வருகின்ற நீரிழிவு நிலையத்திற்கு ஒழுங்காக வருகை தந்த 28 நோயாளர்களுக்கு இலவச வைத்திய ஆலோசனை வழங்கினர். இதற்காக மூன்று தினங்களாக FBS, HBA1C, S.Creatinine, u.ACR   மற்றும் ECG ஆகிய பரிசோதனைகள் இரட்ணம் அறக்கட்டளையின் நிதி உதவியுடன் மூளாய் கூட்டுறவு வைத்திய சாலையின் ஆய்வுகூடத்தில் நடைபெற்றது.

மேலும் அன்று நடைபெற்ற கூட்டத்தில் Dr.ம.அரவிந்தன் அவர்கள் அனைவரது வேண்டுகோளிற்கு இணங்க புத்தாண்டில் இருந்து மாதம் ஒருமுறை மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் இயங்கும் நீரிழிவு நிலையத்திற்கு வருகை தருவதாக கூறியது அனைவருக்கும் மகிழ்வினையளித்தது. 3 மாதத்திற்கு தொடர்ந்து வருகைதரும் நோயாளர்கள் Dr.ம.அரவிந்தன் அவர்களின் வைத்திய ஆலோசனையை பெற முடியும் என மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை நிர்வாகத்தினர் அறிவிப்பு வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் Dr.ம.அரவிந்தனும் அவரது குழுவினரும் மூளாய் வைத்திய சாலையிலுள்ள முதியோர் பராமரிப்பு பகுதியில் தங்கியுள்ள 20 முதியோர்களுக்கு மதிய உணவு அளித்தமை பாராட்டுக்குரியது.

Comments are closed