New Board of Directors Takes Charge at Moolai Co-operative Hospital. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் புதிய நிர்வாக சபை பொறுப்பேற்றது.
வடக்கின் யாழ்ப்பாணத்தில் வலிகாமம் மேற்கில் மூளாய்க் கிராமம் இலங்கை மருத்துவ உலகில் ஓர் மறக்கமுடியாத, தவிர்க்கமுடியாத ஒரு அத்தியாயம். வடமாகாணத்தின் சகல மூலைகளில் இருந்தும் மருத்துவத்திற்காக தேடிவந்த இடம் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை. “மூட்டு வலியென்றாலும் மூளாய்க்குப் போனால்தான் தீரும்” என்று வேடிக்கையாகச் சொல்வார்கள்.
புகழ்பூத்த பெரியோர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய கூட்டுறவு வைத்தியசாலையில் தான் அன்று வடமாகாணத்தில் பலரும் பிறந்தார்கள். தெற்காசியாவில் முதலாவது பெரிய கூட்டுறவு வைத்தியசாலை மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை என்பது மிகவும் பெருமைக்குரிய விடயம். இவ்வைத்தியசாலை மூளாயின் அடையாளங்களில் ஒன்றும், மூளாய்க்கு பெருமை சேர்க்கின்ற ஒன்றுமாகும்.
உள்ளாட்டுப் போரின் போது இரவுபகல் பாராது, இருந்தவற்றைக் கொண்டு (பொருளாதாரத்தடை அமுலில் இருந்தது) மிகச்சிறந்த சேவையை வழங்கினார்கள்.இன்றைய தலைமுறையினருக்கு இவை தெரிய வாய்ப்பில்லை.இலங்கையின் மிகப் பிரசித்தி பெற்ற வைத்தியர்களான Dr.சம்பந்தன், Dr.சாக்கோ,Dr.கெங்காதரன் ஆகியோர் கடமை புரிந்து வைத்தியசாலையைப் பெருமைப்படுத்தினார்கள். யாழின் சகல பகுதிகளில் இருந்தும் வந்து தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்கள்.பிரதான சிகிச்சைப் பிரிவுகளை ஆரம்பிக்க தென்னிந்த நடிகர்களான திரு.எம் ஜி ஆர் அவர்களும் திரு.சிவாஜி அவர்களும் உதவியிருந்தனர்.திரு.சிவாஜிகணேசன் அவர்கள் நாட்டிய மரம் அவர் நினைவாக வைத்தியசாலை வளாகத்தில் உள்ளது.
இராணுவ படையெடுப்புக்களினால் பாதிக்கப்பட்டு சிறிது காலம் இயங்காது இருந்த வைத்தியசாலை மெல்ல மெல்ல உயிர்ப்பெற்றது.இதனை அறிந்த மூளாய் மண்ணின் மைந்தர் (மறைந்த செல்லத்துரை, கோவிந்தர்,பேரம்பலம், சிற்றம்பலம் குடும்பத்தில் சிற்றம்பலம் அவர்களின் புதல்வர்) மறைந்த Dr.ராஜசுந்தரம் அவர்கள் ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து வருகை தந்து,இங்கேயே தங்கியிருந்து எங்கள் வைத்தியசாலையைப் அதனது செலவில் அழகாகப் புனரமைத்தார்.இந்த மாமனிதரை மூளாய் என்றும் நன்றியுடன் நினைவு கூரும்.
இன்று பல நவீன வசதிகளுடன் இயங்குகின்ற வைத்தியசாலையில், மகப்பேறு அலகு (யுத்தகாலத்தில் மூடப்பட்டிருந்தது) மீண்டும் திறக்கப்பட்டு மூளாயைச் சேர்ந்த பெண்ணொருவர் அழகிய மகவைப் பெற்றெடுத்தார்.புதுப் பொலிவுடன் இயங்கிவருகின்றமால் சுற்று வட்டார மக்கள் போக்குவரத்துப் பிரச்சனைகள் குறைந்த மூளாய் வைத்தியசாலையை நாடுகின்றனர்.வைத்தியசாலை சுற்றுச்சூழலை சுத்தமாகவும்,அமைதியாகவும் வைத்திருந்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
இவ்வைத்தியசாலையில் அண்மையில் புதிய நிர்வாகத் தெரிவு (25.10.2025)நடைபெற்றது.அதன் புதிய தலைவராக திரு.உதயசூரியன் அவர்கள் தெரிவாகியுள்ளார் அவருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தரான இவர்,ஒரு சேவை மனப்பான்மை மிக்க சமூக சேவையாளர்,மாவட்ட லயன்ஸ் ஆளுனர், மிகத் திறமையான நிர்வாகி,ஆளுமைமிக்க மனிதர்,இணக்கசபை போன்ற பல தளங்களில் இயங்குகின்ற பன்முகத் திறமையாளர்,இவர் தலைமையில் வைத்தியசாலை இன்னும் மிளிரும் என்பது எல்லோரினதும் எதிர்பார்ப்பு. சில புதியவர்களும், பல பழையவர்களும் என புதிய நிர்வாகம் அமைந்துள்ளது.அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் 💐உங்களிடம் இருந்து மிகத் தரமான சேவையை எதிர்பார்க்கின்றோம்.🙏

தலைவர் திரு.தி.உதயசூரியன் (தொல்புரம்)
உப-தலைவர் திரு.தி.விஸ்வரூபன் (காரைநகர்)
செயலாளர் திரு.கா.பார்த்தீபன் (மூளாய்)
பொருளாளர் திரு.அ.கிருஷ்ணமூர்த்தி (பண்ணாகம்)
பணிப்பாளர் சபை உறுப்பினர்கள்
திரு. அ.நி.மனுநீதி (சுழிபுரம்)
திரு.மா.ஞானேஸ்வரன் (வட்டுக்கோட்டை)
திருமதி.செ.நாச்சியார் (சுழிபுரம்)
திரு.மு.பரம்தில்லைராசா (காரைநகர்)
திரு.இ.நவரத்தினராசா (வட்டுக்கோட்டை)
திரு.த.சிறிதரன் (சுழிபுரம்)
திரு.க.நடராசா (மாதகல்)
திரு.அ.கெளதமன்(சுழிபுரம்)
திரு.நி.திருவரசன் (வட்டுக்கோட்டை)














Comments are closed