“குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்” என்றார் வள்ளுவர். ஒரு குழந்தையை ஈன்றெடுத்தல் என்பது பெருந்தவம்.
“மணம் முடித்து தம்பதிகளாக வாழும் போது எதிர்பார்ப்பது ஒரு குழந்தைப் பாக்கியமே ஆகும்”. மாறிவரும் வாழ்வியல் சூழ்நிலைகளாலும், அடிப்படையான மருத்துவ காரண, காரணிகளாலும் குழந்தையின்மை அல்லது கருவுறாமை எனும் நிலை திருமணமான தம்பதியினரிடையே அதிகம் நிலவுகிறது.
குழந்தையின்மை பிரச்சனைக்கு ஆண் – பெண் இருவருக்கும் சம வாய்ப்பு இருப்பதை இப்போது சமூகம் உணர்ந்திருக்கிறது குழந்தை பெறக்கூடிய உயிரணு இல்லாதது ஆண் தரப்பிலும், கருவை சுமந்து பிரசவிக்கும் திறன் இல்லாதது பெண் தரப்பிலும் ஏற்படக்கூடிய பிரச்சனை.
இந்த பிரச்சனையால் பிரிவு, இறப்பு, மனநிலை பாதித்தல் என இருந்த நிலைமை இப்போதில்லை. காரணம் அபார மருத்துவ வளர்ச்சி, சரியான சிகிச்சை, திறமையான மருத்துவர், உறுதியான நம்பிக்கை இருந்தால் எந்த தம்பதியும் குழந்தை பெற முடியும் என நிரூபணம் ஆகியிருக்கிறது. குழந்தையின்மைக்கு ஆண் – பெண்ணின் பொதுவான காரணம் இது என்றாலும், அதற்கு பல வகையான காரணங்கள் இருக்கின்றன.
பெண்வகைகுறைபாடுகள் :
1.கருப்பை உட்சுவர் வளர்ச்சி (எண்டோமீட்டியாசிஸ்)
2. கருக்குழாய் அடைப்பு (பெலோபியன் ட்யூப் பிளாக்)
3. கரு முட்டை உருவாகாதது அல்லது சரியான வளர்ச்சி இல்லாத கரு முட்டை.
4. கருப்பை வாயில் தோன்றும் சளித்திரவம் விந்தணுவை கொன்று விடுவது.
5. கர்ப்ப காலத்தை முழுமை பெறச் செய்யத் தேவையான ஹார்மோன் சுரக்காதது.
6. பெண்ணின் வயது (34க்கு மேல் கரு முட்டை வாய்ப்பு குறையும்)
ஆண்வகைகுறைபாடுகள் :
1. குறைந்த உயிரணுக்கள் எண்ணிக்கை.
2. மது, புகையிலை பொருட்கள், மோசமான உணவு முறையால் விந்தணு குறைபாடு.
3. துணையின் கருமுட்டை வெளியாகும் காலத்தில் சேராமல் இருப்பது.
4. உயிரணுக்களின் நகரும் சக்தி குறைவு (மொபிலிடி)
5. உயிரணுவை கொல்லும் புரதங்கள் அதிக சேர்க்கை.
6. உயிரணு வெளியேற்ற பாதையில் அடைப்பு.
7. விதை வளர்ச்சியின்மை.
8. விதைப் பையில் விபத்து, காயம் காரணமாக உயிரணு உற்பத்தி தடை.
இவ்வாறான குறைபாடுகளைப் பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்து கொண்டு செயற்கை முறை கருக்கட்டலை மேற்கொள்ள முடியும். செயற்கை முறை கருத்தரிப்பென்பது IUI, IVF, ICSI, IMSI போன்ற முறைகளில் மேற்கொள்ளப்படும். குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு இப்படி நவீன முறைகளில் எளிதாக சிகிச்சை அளிக்க இப்போது மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் கருதரிப்பு மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மூளாய் கருதரிப்பு மையத்தில் சிறந்த மகப்பேற்று நிபுணர்களிடம் ஆலோசனைகளும்,ஆய்வுகூட பரிசோதனைகளும் செய்யும் வசதிகள் உள்ளன. இவற்றின் ஊடாக கருப்பையகமான கருவூட்டல் முறையை மேற்கொள்ளலாம்.
திருமணமாகி நீண்ட காலம் ஆகியும் குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு இது ஒரு வரப் பிரசாதமாகும். கணவனின் விந்தணுக்களை ஒரு குழாய் மூலமாக மனைவியின் கருப்பையினுள் செலுத்தி பெண்ணை கருவுறச் செய்யலாம் இந்த முறைக்கு ஆங்கிலத்தில் IUI என்பார்கள். இதற்காக கணவன் சுய இன்பத்தின் மூலம் பெறப்படும் விந்தணுக்களை சேகரித்து கொடுக்க,இது நேரடியாக கருப்பையினுள் குழாய் மூலம் மருத்துவர்களால் செலுத்தும் இந்தமுறை மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பத்தை மேலும் அதிகரிக்க கணவனின் விந்தணுக்களை பதப்படுத்தப் (PROCESSING) பட்ட பின்பு செலுத்தப்படலாம். அதாவது அவரது ஆணுறுப்பில் இருந்து சுய இன்பம் மூலமாக வெளியேறும் திரவத்தில் உள்ள திறன் கூடிய விந்துகளை மட்டுமே பிரித்தனுப்புவதன் மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பம் அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சில சமயங்களில் கணவனின் விந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அல்லது அந்த திரவத்தில் விந்து இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அந்த சம்பந்தப்பட்ட தம்பதிகள் சம்மதிக்கும் பட்சத்தில் வேறு ஒரு ஆணின் ஆணுறுப்பில் இருந்து பெறப்படும் திரவத்தை பெற்று பெண்ணின் கருப்பைப் பைக்குள் செலுத்தி குழந்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்றும் மருத்துவம் கூறுகிறது. இவ்வாறு விந்துகள் செலுத்தப்படுவது பெண்ணிலே முட்டை உருவாகும் நேரத்திலே மேற்கொள்ளப்படும். சில வேளை அந்தப் பெண்ணுக்கு முட்டை உருவாக்கத்தை தூண்டும் மருந்துகள் கொடுக்கப்பட்டு பின்பு ஸ்கேனிங் மூலம் முட்டை உருவாக்கி உள்ளது என்பதை உறுதி செய்த பின்பே கொடுக்கப்படும்.பெண்ணின் மாதவிடாய் காலத்தை கணித்து அதற்கேற்ப முட்டை உருவாகும் தினத்தை கண்டறிந்த பின் இவ்வாறு விந்துகள் செலுத்தப்பட்டு குழந்தைப் பேறு பெறலாம்.
குழந்தையின்மை என்பது தீர்க்கக்கூடிய ஆனால் சிக்கலான ஒரு பிரச்சனை. இதை கருத்தில் கொண்டு, இத்துறையில் தேர்ந்த வல்லுநர்களோடும், ஈடிணையற்ற தொழில்நுட்ப ஆய்வகங்களோடும், சரியான சிகிச்சை முறை கொண்டும், ஒரே இடத்தில் தாய்மை அடையச் செய்வதே எமது கருதரிப்பு மையத்தின் நோக்கமாகும்.