Lorem ipsum dolor sit amet, consectet eiusmod tempor incididunt ut labore e rem ipsum dolor sit amet. sum dolor sit amet, consectet eiusmod.

Visiting Hours

Gallery Posts

Blog Details

கூட்டுறவு வைத்தியசாலைச் சங்கம் (வ-து) மூளாயினது உலக நீரிழிவு தினக் கொண்டாட்டம்.

உலக நீரிழிவு தினமானது மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் 19.11.2023 அன்று அவர்களது நீரிழிவு நிலையத்தில் திரு.அ.நித்தியானந்தமனுநீதி அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் திரு.கா.பார்த்தீபன், திரு.அ.கிருஸ்ணமூர்த்தி, திரு.செ.கெங்கதாரன், பேராசிரியர் வைத்திய கலாநிதி இ.சுரேந்திரகுமாரன், வைத்திய அத்தியட்சகர் (MS), வைத்திய கலாநிதி S.ஸ்ரீபவானந்தராஜா, வைத்தியப்பணிப்பாளர், Dr.N.ஜெயக்குமார், சுகாதார வைத்திய அதிகாரி, தெல்லிப்பழை, Dr.P.K.நவரட்ணராஜா,வைத்திய அதிகாரி, திரு.S.கிரிதரன், தாதியபரிபாலகர், செல்வி.கி.கயறூபி, தாதி மற்றும் ஏனைய தாதிகள், ஏனைய பணியாளர்கள் மற்றும் அவர்களின் நீரிழிவு மையத்தின் நோயாளிகளும் கலந்து கொண்டார்கள்.

 

திரு.அ.நித்தியானந்தமனுநீதி தலைமை உரையில் மூளாய் நீரிழிவு மையத்தினது சேவைகள் பற்றி கூறினார். அதனைத் தொடர்ந்து பேராசிரியர் வைத்திய கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் உரையில் தெற்றாநோய்களில் ஒன்றான நீரிழிவுநோயின் பரவல் இலங்கையில் 23% அதிகரித்துள்ளது எனவும் இந் நோயானது மனிதனின் கண், சிறுநீரகம், இதயம், நரம்பு மற்றும் கால் ஆகிய அங்கங்களை பாதிப்பதோடு அதன் அறிகுறிகளாக அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக களைப்பு, அடிக்கடி பசி ஏற்படுதல், குணமாகாத காயங்கள், கண் பார்வை மங்கலாகுதல் மற்றும் கை, கால்களில் நடுக்கம் என்பன காணப்படுகிறது என்றும் அதனை தடுப்பதற்கு சிபாரிசு செய்யப்பட்ட உணவு பழக்கவழக்கங்கள், முறையான உடற்பயிற்சி, மருந்துகள், வைத்திய ஆலோசனைகள் மற்றும் மனோரீதியான ஆரோக்கியம் என்பன முக்கியமானது என கூறியது பயன்மிக்கது.

வைத்தியப்பணிப்பாளர், Dr.N.ஜெயக்குமார், Dr.P.K.நவரட்ணராஜா, திரு.S.கிரிதரன், செல்வி.கி.கயறூபி ஆகியோர்கள் அவர்களின் உரையில் நீரிழிவு நோயின் பாதிப்புகள் மற்றும் அதன் முகாமைத்துவம் பற்றி விளக்கி கூறினார்கள் அதனைத் தொடர்ந்து சபதம் எடுக்கும் நிகழ்ச்சியில் பிராந்திய சுகாதார பணியகம் வெளியிட்ட ஆரோக்கிய சபதத்தை அனைவரும் எழுந்து நின்று கூறியது விழாவை சிறப்பித்தது மற்றும் நீரிழிவு மையத்தின் துண்டுபிரசுரம் (Leaflets) வழங்கப்பட்டது. அதில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கூட்டுறவு வைத்தியசாலைச் சங்கம் மூளாயினால் 10% விலைக்கழிவினை (HBA1C, Lipid profile, Serum Creatinine, U.M.A) வழங்கியது மிகையானது. நீரிழிவு நிலையமானது Ratnam Foundation (UK) யின் அனுசரனையுடன் 2005ம் ஆண்டு இருந்து நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leaflets

Comments are closed